தேசிய அபிவிருத்தி இலக்குகளை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.
எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை உருவாக்கும் நோக்கில் இந்தக் குழுவினை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். துறைசார் நிபுணத்துவ அறிவுடைய புத்திஜீவிகளைக் கொண்ட 35 பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
2030ம் ஆண்டுக்கான தேசிய அபிவிருத்தி இலக்குகள் இந்தக் குழுவினால் உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் மக்களின் விருப்பத்தைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் 2030ம் ஆண்டு வரையில் மாற்றமடையாத அபிவிருத்தி இலக்கு கொள்கையொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.