விரைவில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா ஒப்பந்தம்!!

இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ( எட்கா ஒப்பந்தம்) தொடர்பிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் சில நாட்களில் இடம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இம்மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.