ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக, நிஜத்தில் முத்தமொன்று கொடுக்கும் போது உண்டாகும் உணர்வினை ஏற்படுத்தும் வகையில் முத்தங்களை பரிமாறக்கூடிய புதிய கைத்தொலைபேசி துணை உபகரணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் உண்மையானதும் நம்பமுடியாததுமான கண்டுபிடிப்பாகும். லண்டனிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் எமா யென் சென் என்ற மாணவி ஒருவரினால் இவ்வகையான முத்தப் பரிமாற்ற உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணத்துக்கு ‘KISSENGER’ என அவர் பெயரிட்டுள்ளார்.
தற்போது இந்த கண்டுபிடிப்பு பரீட்சார்த்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் மிகவும் விரைவாக இதனை முழுமைப்படுத்தவுள்ளதாக சென் தெரிவித்துள்ளார்.
கிஸெஞ்சர் எனப்படும் இந்த உபகரணத்தை ஸ்மார்ட் கைப்பேசிகளில் பொருத்தியதன் பின்னர் அதன்மூலம் முத்தமிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதை காலகட்டத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் கைப்பேசிகளின் மூலம் முத்தத்தினை பரிமாற்றிக்கொண்டாலும் அது வெறும் ஒலி வடிவத்திலேயே காணப்படும் எனவும் இந்த உபகரணத்தில் காணப்படும் உணரி அதாவது சென்ஸர் மூலம் உணர்ச்சிகரமானதான முத்தப்பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியுமெனவும் அதன்போது நிஜத்தில் முத்தத்தை பெறுவதனை போன்று உணர முடியுமெனவும் சென் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த உபகரணத்தின் குறைப்பாடொன்றாக கருதப்படுவது, இது ஐபோன் கைப்பேசிகளுடன் மாத்திரமே உபயோகிக்க கூடியவாறாக வடிவமைக்கப் பட்டுள்ளமையாகும்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் பயனடையும் விதத்தில் இதனை மாற்றியமைப் பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.