விரைவில் முதல்வராகிறார் சசிகலா!

அதிமுகவின் கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள சசிகலா விரைவில் முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

ஜெயலலிதா கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் ஒன்றாகவே வைத்திருந்து எங்களையும், தமிழக மக்களையும் வழி நடத்தினார்.

சசிகலாவும் தற்போது ஒட்டு மொத்த அதிமுக நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை கண்ணீர் மல்க ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டமாக அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று தமிழகத்தை வழிநடத்த வேண்டும். அப்போது தான் ஜெயலலிதாவின் லட்சிய பயணம் நிறைவு பெறும்.

தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று விரைவில் சசிகலா முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார்.