பிரேசில்: கொலையில் முடிந்த கொண்டாட்டம் : புத்தாண்டு விழாவில் 11 பேர் பலி

பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முன்னாள் மனைவி உள்பட 11 பேரை சுட்டுக் கொன்றவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார்.

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ மாநிலத்தின் காம்பினாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மது விருந்துடன் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அந்த வீட்டின் மதில்சுவரை தாண்டி உள்ளே குதித்த சிட்னி ராமிஸ் டி அராஜோ(49) என்பவர், வீட்டின் கதவை திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தார்.

அங்கு உற்சாகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முன்னாள் மனைவி மற்றும் தங்களது 8 வயது மகனை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றார். புத்தாண்டு விருந்தில் பங்கேற்ற மேலும் 8 பேரை சுட்டுக் கொன்ற அந்நபர் இறுதியாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார்.