படர்தாமரையைப் போக்க சூப்பரான இயற்கை வைத்தியங்கள்!

பூஞ்சையின் தாக்கம் காரணமாக ஏற்படும் படர்தாமரையானது நமது சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் அதிகமாக பாதித்து, கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துகிறது.

எளிதில் பரவக்கூடிய இந்த படர்தாமரை நோயைக் குணப்படுத்த சூப்பரான இயற்கை வைத்தியம் இதோ!

பூண்டு

பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

படர்தாமரை இருக்கும் இடத்தில், தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால், படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. எனவே இதை படர்தாமரைக்கு பயன்படுத்தினால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

சூடம் மற்றும் கற்பூரம்

கற்பூரம் மற்றும் சூடனில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. எனவே இதை படர்தாமரைக்கு பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு அல்லது அதனுடைய எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை விரைவில் மறைந்து விடும்.

உப்பு மற்றும் வினிகர்

உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது மறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளானது, பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கிறது. எனவே இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை குணமாகும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் போன்ற தன்மைகள் அதிகமாக உள்ளது. எனவே பச்சை பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவி வந்தால், நமது சரும பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.