ஜெயலலிதா மரணத்தில் மர்மம்! உண்மையை போட்டுடைத்த வெங்கய்யா நாயுடு!

இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரும், மறைந்த ஜெயலலிதாவின் நண்பருமான வெங்கய்யா நாயுடு இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகிப்பது தவறாகும்.

அவருக்கு லண்டன் மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என பல பிரபல மருத்துவர்கள் சிகிச்சையளிதார்கள். ஆயினும் அவர் உடம்புக்கு அந்த சிகிச்சை பலனளிக்காததால் தான் அவர் மரணமடைந்தார்.

அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் நபர்கள் அதற்கான ஆதாரம் இருந்தால் அதை வெளியிட்டு அதை பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.