நாமலின் வாழ்வை மாற்றவிருக்கும் 2017!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திருமணம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்த வருடத்தில் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என மஹிந்தவின் குடும்ப ஜோதிடரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது திருமணத்திற்காக பலமான ஜாதகத்தை கொண்ட அரசியல் அல்லது வர்த்தக குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை தேடுவதற்காக ஷிரந்தி ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குடும்பத்தின் ஏனைய பிள்ளைகள் திருமணம் செய்ய வேண்டும் என்பதனாலும், மூத்த மகன் திருமணம் செய்யாமல் உள்ள நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஷிரந்தி ராஜபக்சவின் கருத்தாகும்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் குடும்பத்தின் மூவரில் ஒருவருக்கேனும் திருமணம் செய்து வைப்பதற்கு தந்தை என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ச அக்கறை காட்டமை தொடர்பில் பல முறை ஷிரந்தி ராஜபக்ச, மஹிந்தவை திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நாமலின் ஜாதகத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக பலமான ஜாகத்தை கொண்ட பெண் ஒருவர் கிடைக்கும் வரை இந்த திருமணம் மேற்கொள்ளப்படாதென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.