பாதுகாப்பற்ற தலைக்கவசங்களை அணிவதற்கு தடை!

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் பயன்படுத்துவதற்கு இந்த வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தற்காலிகமாக இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் தரக்குறைவான தலைக்கவசங்களை அணிவதினால் விபத்தின் போது தலையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கே தரம் குறைந்ததும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் உபயோகிப்பதைத் தடை செய்யத் திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது, தலைக்கவசத்தினுள் வைத்து அலைபேசி பாவிப்பதையும் தடை செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.