சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர் ஒருவரினால் 4000 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடம்பர வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மகரகம, வித்தியாகார மாவத்தையில் பல ஏக்கர் காணி பரப்பளவை கொண்ட வீடு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் பிரமுகரினால் வீட்டை கொள்வனவு செய்ததனை தொடர்ந்து, அந்த வீட்டிற்கு செல்லும் வீதிகளுக்கு அரசாங்க செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை முதல் முறையாக மஹரகம பிரதேசத்தின் பிரபல வர்த்தகரான மார்டின் பெரேராவினால் கட்டப்பட்டுள்ளது. அவர் கடந்த காலங்களில் வர்த்தக ரீதியாக வங்குரோத்தடைந்தமையினால் மாலு சுரங்க என்ற பிரபல வர்த்தகருக்கு அதனை விற்பனை செய்துள்ளார்.
அவர் கடந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளதுடன், இராணுவத்தினருக்கு மீன் உட்பட உணவு வழங்குபவராக செயற்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் தற்போது நல்லாட்சியின் முக்கியஸ்தருக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் ஊடாக இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
4000 இலட்சம் ரூபா செலவு செய்து வீட்டை கொள்வனவு செய்யக்கூடிய அளவு இந்த நல்லாட்சியிலும் திருடர்கள் உருவாகியுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
நீச்சல் தடாகம், டெனிஸ் விளையாட்டு மைதானம் ஆகியவைகள் இந்த வீட்டு சூழலில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரையில் பிரபு பாதுகாப்பாளர்கள் இந்த வீட்டின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது