கரையோர புகையிரதம் தடம்புரண்டது…! நிலைமை நாளை காலையே சீராகும்!!

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி இன்று மாலை சென்ற சாகரிக்கா புகையிரதம், காலி புகையிரத நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டது.

இதனையடுத்து கரையோர புகையிரத சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து வெளியில் பாய்ந்துள்ளன.

இதன்காரணமாக 25க்கும் 30க்கும் இடைப்பட்ட சிலப்பர் கட்டைகள் சேதமடைந்தன. இந்தநிலையில் கரையோர புகையிரத சேவைகள் நாளை காலையே வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்தை அடுத்து புகையிரதசேவைகள், கொழும்பு முதல் ஜின்தொட்ட மற்றும் அம்பலாங்கொட ஆகிய புகையிரத நிலையங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.