வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் அதிகாலை லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில் மீண்டும் 18ஆம் திகதியே முதலமைச்சர் நாடு திருப்புவார்.
இதேபோல் மாகாணத்தின் மற்றைய 4 அமைச்சர்களில் 3 அமைச்சர்களும் கூட எதிர்வரும் 10ஆம் திகதியளவில் வெளி நாடு செல்லவுள்ளனர்.
இந்த நிலையில் வடமாகாண பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை காலை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து பதில் முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தினை எடுக்கவுள்ளார்.