விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல் 50 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தமாகும்.
அதற்கமைய இதுவரை 30 அமெரிக்க டொலராக காணப்பட்ட இந்த விமான நிலை வரி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியில் இருந்து 50 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2016 வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் இந்த வரி 25 முதல் 30 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் போது டிக்கட்டிற்காக செலுத்த வேண்டிய கட்டணம் 3000 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, விமான பயண பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.