புதிய ஆண்டில் இராணுவத்தினரின் கவனம்!

இராணுவத்தினர் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தையும், நாட்டின் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டும் என இராணுவ கட்டளைத் தளபதி லெப்ரினன் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் முதல் நாள் பணிகளை குறிக்கும் வகையில் இன்று காலை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளளர். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்..

இராணுவத்தினர், வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தல்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அத்துடன் வறுமையை ஒழிக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் விசுவாசமாகவும் செயற்பட வேண்டும்.

குறித்த விடயங்கள் தொடர்பாகவே இந்த புதிய ஆண்டில் இராணுவம் கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.