முதல்வர் ஓபிஎஸ்-க்கு எதிராக தம்பிதுரை போர்க்கொடி: ஆட்சியை சசிகலாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்!

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக பொதுச்செயலர் சசிகலாவிடம் முதல்வர் பதவியையும் ஒப்படைக்கவும் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில்அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் தம்பிதுரை கூறியுள்ளதாவது,

அதிமுக பொதுச்செயலர் சசிகலா விரைவில் தமிழகத்தின் முதல்வராக வேஎண்டும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையது அல்ல. கட்சி மற்றும் ஆட்சி தலைமை ஒருவரிடமே இருக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களின் மனநிலையை ஏற்று சசிகலா விரைவில் முதல்வராக வேண்டும். சசிகலா முதல்வராக பொறுப்பேற்பது தமிழகத்துக்கு மிக மிக இன்றியமையாதது.

இவ்வாறு தம்பிதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.