அமெரிக்காவின் டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பு தற்போது 6.95 ஆக உள்ளது. சீன பங்குச்சந்தை கடந்த ஆண்டில் பெரும் சரிவு கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான யுவான் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வந்தது.
இந்நிலையில், 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிற்கு எதிரான சீன யுவான் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது.
சீனா தனது அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பங்களிப்பை குறைத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான சீன யுவான் மதிப்பு கடந்த ஆண்டு 7 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளின் கரன்சியில் சீனா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பங்களிப்பை 26.4 சதவீதத்தில் இருந்து 22.4 ஆக குறைத்துள்ளது.
சீன யுவானை மதிப்பிடுவதற்குப் கூடுதலாக 11 கரன்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன கரன்சியை தீர்மானிப்பதில் 13 நாடுகள் மட்டுமே பங்கெடுத்து வந்தது.
2017-ம் ஆண்டு முதல் சீன யுவான் மதிப்பை தீர்மானிப்பதில் 24 நாடுகளின் கரன்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீன அந்நிய செலாவணி வர்த்தக மையம் டிசம்பர் 29-ம் தேதி அறிவித்தது.