தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அனுராக் தாகூர் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் இது தனிப்பட்ட போராட்டம் அல்ல. இது விளையாட்டு அமைப்புக்கான சுயாட்சி குறித்த போராட்டமாகும். எல்லா குடிமகன்களையும் போல் நானும் சுப்ரீம் கோர்ட்டை மதிக்கிறேன்.
ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மேற்பார்வையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பாக செயல்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருதினால் அதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் நலன், விளையாட்டு அமைப்பின் சுயாட்சி ஆகியவை குறித்த எனது அர்ப்பணிப்பு எப்பொழுதும் நிலைத்து இருக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றியதை கவுரவமாக கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது’ என்றார்.