மோடிக்கு பன்னீா் ரகசிய கடிதம்..! கதி கலங்கிய சசி.! காட்டிக் கொடுத்த தம்பிதுரை.!

பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியதால் ஒட்டு மொத்த அதிமுக தலைமைக்கு விரோதியானார் பன்னீா் செல்வம். இதன் காரணமாகவும் முதல்வா் பதவியை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி அனுப்பினார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில், ‘தங்களது தலைமையில் நாடு எல்லா வளங்களையும் பெற்றும் முன்னேற்றம் அடைய வாழ்த்துவதாக’ தெரிவித்திருந்தார்.

இதுதான் கார்டன் வட்டாரத்தைக் கொதிக்க வைத்துவிட்டது. ‘ அடுத்தடுத்த ரெ ய்டுகளால் நம்மை வழிக்குக் கொண்டு வர மிரட்டி பார்க்கிறது.

இந்த வேளையில் மத்திய அரசு நன்றாக செயல்படுகிறது. மேலும் நன்றாக செயல்பட வாழ்த்து என கடிதம் அனுப்புவதா.

மற்ற மாநில முதலமைச்சர்களே அமைதியாக இருக்கும்போது, இவர் எதற்கு தேவையில்லாமல் வாழ்த்த வேண்டும்; அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?’

எனக் கேள்வி கேட்டு கார்டன் வட்டாரத்தில் சசிகலா ருத்ரதாண்டவம் ஆடியதாக கூறப்படுகிறது.

இதனை தொடா்ந்துதான் மக்களவை துணை சபாநாயகர் லெட்டர் பேடிலேயே, சசிகலாவை முன்னிறுத்தி அறிக்கை வெளியிட்டார். ‘

நீங்கள் பதவி விலகுங்கள்’ என நேரடியாகவே ஓ.பி.எஸ்ஸைப் பார்த்துக் கேட்கிறார் தம்பிதுரை.

ஆளுநர் அவர்கள் உடனடியாக முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ என அதிர வைத்தார் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

.நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது. சட்ட சபையைக் கலைப்பது; அல்லது பன்னீா் தனது.பதவியை ராஜினாமா செய்வது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றால் பதவியை இழக்க விரும்பாத அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்ஸுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மீதமிருக்கிறது. ஆளுநரின் பிடியும் இதில் அடங்கியிருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க ஆதரவு கொடுக்கலாம்.

இதையெல்லாம் உணர்ந்துதான், கட்சியின் சீனியர்கள் மூலம் சசிகலா கூட்டம். தூதுப் படலத்தை ஆரம்பித்து உள்ளது.

பன்னீா் செல்வம்பதில் சொல்லாமல் மௌனமாகவே நாட்களைக் கடத்தி வருகிறார்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்த கடைசி நாளில், எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதுபோல, பதவியை விட்டுத் தருவது குறித்து பன்னீர்செல்வத்திடமும் கடிதம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கார்டனுக்குச் சென்றபோதும், இதுகுறித்து விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. ‘

எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் முதல்வர் ஆக வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. மத்திய அரசின் துணையோடு கோட்டைக்குள் நடக்கும் விஷயங்களையும் அவருக்கு பிடிக்க வில்லை இதனால் பன்னீா் செல்வத்திடம் ருத்ரதாண்டவம் ஆடினாராம் சசிகலா.

தனக்கு கிடைக்கதாக முதல்வா் பதவி பன்னீா் செல்வத்திற்கு கிடைத்ததில் உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருக்கும் தம்பிதுரை சசிகலா மற்றும் பன்னீா் செல்வத்தின் இடைவெளியை ஊதி பெரிதாக்குகிறாராம்.