இன்றைய ராசி பலன்கள் 04.01.2017

  • மேஷம்

    மேஷம்:  சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில  செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சிறப்பான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு  கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்  தருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள்.  பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.  எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். யாரையும்  யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். லேசாக தலை வலிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம்  தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்
    பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு  பெருகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை  தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.  வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்  உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • மீனம்

    மீனம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம்  குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நேர்மறை எண்ணங்க