போயஸ் கார்டனில் கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா? அதிர்ச்சியடைந்த தொண்டர்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளார். சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மறுபுறம் உள்ள அதிமுக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிமுக-வின் அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு வரும்படி அழைக்கப்பட்டதாகவும், இதில் முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அனைவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவர் அமைச்சர்களிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே புத்தாண்டையொட்டி, ஜெயலலிதா மற்றும் சசிகலா உருவப்படம் பொதிந்த கேக்கை சசிகலா வெட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் முடிவடையாத நிலையில் கார்டனில் கேக் வெட்டப்பட்ட விவகாரம் அதிமுக தொண்டர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக அமைச்சர்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கியதாகவும், இது சசிகலா முதல்வர் ஆவதற்குத் தான் இந்த கையெழுத்து பெறப்பட்டிக்கும் என சில அமைச்சர்கள் கருதியதாக கூறப்படுகிறது.