கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.
இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலரும் பங்கேற்றிருந்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
வாசுதேவ நாணயக்கார நேற்றைய தினம் தனது 78வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.