பழைய 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது: பிரிட்டன் அதிரடி!

பிரிட்டனில் தற்போது 1.3 பில்லியன் மதிப்பிலான நாணயங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. இதில் 433 மில்லியன் மதிப்பில், 1 பவுண்ட் நாணயங்கள் அடக்கம். இவற்றில் போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதல் பழைய ஒரு பவுண்ட் நாணயங்களுக்கு பதிலாக புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை வெளியிடவுள்ளது பிரிட்டன் அரசு.

பழைய ஒரு பவுண்ட் நாணயங்கள் 1983 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டவை. புதிய நாணயங்கள் வரும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

புதிய நாணயங்கள் இரண்டு உலோகக் கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளதகவும், வெளி வட்டத்தில் தங்க நிறத்திலும், உள் வட்டத்தில் வெள்ளி நிறத்திலும் இருக்கும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள நாணயங்களை விட புதிய நாணயங்கள் மாறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.