மனிதர்களைத் தாக்கும் உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் மட்டும் 14.5 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் அடிப்படையில் மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் விளைவாக நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட நானோ தட்டுக்களை உருவாக்கியுள்ளனர்.
10 நானோ மீற்றர்கள் வரையான அளவுடைய இத் தட்டுக்கள் புற்றுநோய்க் கலங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் இத் தட்டுக்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் T வகைக் கலங்களுடன் இணைந்து புற்றுநோய்க் கலங்களை சென்றடைகின்றன.
இத் தட்டுக்கள் உடல் கலங்களுள் செலுத்தப்பட்டு 10 நாட்களில் புற்றுநோய்க் கலங்களை முற்றாக அழிக்கும் ஆற்றல் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய் கட்டிகளை அகற்றும் நானோ தட்டுக்கள் உருவாக்கம்!