நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சிம்பு தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தானம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தின் இசையமைப்பாளர் சிம்பு தான்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து சிம்பு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். இப்படம் குறித்து சிம்பு தனது டுவிட்டரில் ” சக்கப்போடு போடு ராஜா படத்தின் அனைத்து பாடல்கள் கம்போசிங்கையும் முடித்து விட்டேன். ரெக்கார்டிங் மட்டும் தான் மீதமுள்ளது” என தெரிவித்துள்ளார்.
‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், நண்பன் சந்தானத்துக்காக ‘சக்கக்போடு போடு ராஜா’ பாடல்களை சிம்பு முடித்துக் கொடுத்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.