மனித உடலில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உட்பட மொத்தம் 78 உறுப்புகள் உள்ளது.
தற்போது Mesentery என அழைக்கப்படும் சிறுகுடலின் அருகே அமைந்திருக்கும் ஒரு புதிய உறுப்பை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அயர்லாந்து நாட்டில் உள்ள முன்ஸ்டர் மாகாணத்தில் இருக்கும் லிமரிக் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுப்பிடித்துள்ளனர்.
அந்த குழுவின் உறுப்பினர் மருத்துவர் J Calvin Coffey கூறுகையில், இந்த Mesentery உறுப்பின் உடற்கூறியல் மற்றும் அமைப்பை பற்றி கண்டுபிடித்து விட்டோம்.
உடலில் இதன் பணி என்ன என்பதை பற்றி தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இதை கண்டுபிடித்தால் பின்னர் இதன் அசாதாரண விடயங்கள் மற்றும் நோய் பரப்பும் தன்மை பற்றி கண்டுபிடித்து விட முடியும் என கூறியுள்ளார்.
உலக புகழ்பெற்ற, மனிதர்கள் உறுப்புகள் மற்றும் உடற்கூறியல் பற்றி எழுதப்பட்டிருக்கும் Gray’s Anatomy புத்தகத்தில் இந்த புதிய Mesentery உறுப்பு தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த உடலுறுப்பின் எண்ணிக்கை 78லிருந்து 79ஆக உயர்ந்துள்ளது.