தம்மிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் பெயர்பட்டியலை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம், இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இறுதிக்கட்டப்போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் பட்டியலையே மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 30ஆம் திகதிக்குள் இந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.