ரணிலை கவிழ்க்க திட்டமா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக வெளியாகும் செய்தி போலியானதென சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரை சந்தித்த கரு ஜயசூரிய தான் எதிர்வரும் காலங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சிந்தித்துள்ளதாகவும், எனவே தான் அவ்வாறான எதற்கும் தொடர்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

அரசாங்கத்தை நடத்தி செல்ல தடைகள் அதிகம் என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்வோம் என பிரதமரிடம், சஜித் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.