யாழைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேர் இந்தியாவில் தஞ்சம்!!

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 இலட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவர் லோர்ட் நெசபி இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணித்தியாலயங்கள் நீடித்த குறித்த சந்திப்பின் போது, யாழ்.மாவட்டத்தில் பொது நிலமைகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்ந்தார்.

ஆத்துடன், கல்வி, விவசாயம், சுகாதாரம், உட்பட மீள்குடியேற்றங்கள், இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.

ஆதன்போது, 1 இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவில் இருக்கின்றார்கள். தற்போது, இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மீள்குடியேற்றம் தற்போது செய்யப்பட்டு வருகின்றதாகவும், அண்மையில் இந்தியாவில் இருந்து 900 குடும்பங்கள் யாழிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.