பரதனை காப்பாற்றிய ஆஞ்சநேயர்!

14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து வராவிட்டால் அன்றைய தினமே தீக்குளித்து இறப்பேன் என்று ராமரிடம், அவரது பாசமிகு தம்பி பரதன் கூறியிருந்தான். வனவாசம் முடிந்து விட்டது.

ஆனால் கிளம்ப சற்று தாமதம் ஏற்பட்டது. தம்பியின் சத்தியம் தவறாமை தெரிந்ததால், அனுமனை அழைத்தார் ராமர். ‘எனக்கு முன்பாக விரைந்து சென்று பரதனிடம், அண்ணன் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்’ என்று கூறி அனுப்பினார்.

அதன்படி காற்றை விட வேகமாக கிளம்பிச் சென்றார் அனுமன். அப்போது அண்ணன் வர தாமதமானதால் தீ வளர்த்து அதில் இறங்குவதற்காக மூன்று முறை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான் பரதன். அவனது அண்ணன் பாசத்தை எண்ணி மகிழ்ந்த அனுமன், ராமர் கூறியதை எடுத்துரைத்து அவனை காப்பாற்றினார்.