சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு: பீதியில் உறைந்து போன சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என வெளியான தகவல்களால் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஜெயலலிதா 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தத போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ல் திமுக வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு பெங்களூர் விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பின்னர் பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரையும் விடுதலை செய்தது.

ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் திகதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான இறுதித்தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகிவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் முதல்வர் பதவியை எப்படியும் கைப்பற்றி விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த சசிகலா ஆடிப் போயுள்ளாராம்.