-
மேஷம்
மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
-
கன்னி
கன்னி: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
துலாம்
துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
தனுசு
தனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.