ஹர்ஸ டி சில்வாவிற்கு கட்சியில் புதிய பதவி!

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி புதிய பதவியொன்றை வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைச் செயலாளராக ஹர்ஸ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் கூடிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாகவே இந்த துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது