விமல் வீரவன்சவின் வீட்டில் வயக்ரா அதிகமாக பயன்படுத்தியமையினால் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கை மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பினரின் அழுத்தம் காரணமாக இந்த விசாரணை மூடிமறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனைக்கு அமைய அந்த மரணம் சந்தேகத்திற்குரியதென உறுதியாகியுள்ளது.
சில காலங்களாக வயக்ரா மாத்திரை பயன்படுத்தியமையினால் குறித்த இளைஞன் உரிய மாத்திரை அளவு தொடர்பில் அவதானத்துடன் இருந்த போதிலும், சம்பவத்தன்று சிலரின் அழுத்தங்களுக்கமைய அதிக மாத்திரைகள் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்த விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் மிகுந்த மனவருத்தத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.