நியூயார்க் நகரில் பயணிகள் ரயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏதும் இல்லை.

விபத்துக்குள்ளான ரெயிலில் 600 முதல் 700 பேர் வரை பயணம் செய்தனர். விபத்தில் ரெயிலுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.