முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மகன் அசங்க ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வளர்ச்சிக்காக பாடுபடத் தயாராக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் பசில் ராஜபக்ஷவுக்கு ஆதரவான எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபட போவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பசிலின் மகனுக்கு கட்சியில் எந்தவொரு விடயத்தையும் செய்ய முடியும் என்றாலும், அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை ஒருபோதும் வழக்கபடாதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எப்படியாயினும் பசில் ராஜபக்சவினால் தனது மகன் அழைத்துவரப்பட்டால் இது ராஜபக்சர்களுக்கு பாரிய பாதிப்பு எனவும், விசேடமாக மஹிந்த தரப்பினருக்கு பெரிய அளவிலான தாக்கமாக காணப்படும் என எதிர்க்கட்சியின் சிரேஷ்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.