இன்றைய ராசி பலன்கள் 06.01.2017

  • மேஷம்

    மேஷம்: திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர் காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திட்டம் நிறைவேறும் நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: மதியம் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.