உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தொடர்ந்தும் ஒத்தி வைக்க இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
பல்வேறு தந்திரங்களைச் செய்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க அரசாங்கத்திற்கு தேவை ஏற்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்கும் அவசியம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே உண்டு.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சிகள் புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு வெளியிடக் கூடும் என்பதனால், அதனை காரணம் காட்டி பிரதமர் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கின்றார்.
தொடர்ந்தும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டால் பாரியளவில் மக்கள் கிளர்ச்சி ஏற்படும்.
வாக்கு உரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டங்களை அடக்கி விட முடியாது.
இவ்வாறு தேர்தலை ஒத்தி வைத்தால், அரசாங்கத்திற்கு உதவி வரும் உள்நாட்டு வெளிநாட்டு சிவில் அமைப்புக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்படும்.
மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டால் அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையில் செல்லக் கூடும் என வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.