மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானது என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி குணவர்தன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்புச் சட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தேசிய பொலிஸ் மற்றும் மாகாண பொலிஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டால், பொலிஸ் திணைக்களத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
35 ஆண்டுகளாக பொலிஸ் சேவையில் ஈடுபட்ட அனுபவத்தின் ஊடாக இதனைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் பாடசாலை மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய முடிந்தமைக்கு பிரதான காரணம் பிளவடையாத பொலிஸ் சேவையேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்பு பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டால் பொலிஸ் மா அதிபரினால் மாகாண பொலிஸ் விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.