புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.