பிரபல தெலுங்கு நடிகரான கிருஷ்ணராஜு தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்து நீண்ட காலம் ஆகியும் மத்திய அரசு இன்னும் புதிய ஆளுநரை நியமிக்காமல் தற்காலிக ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை நியமித்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரும், மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜுவை மத்திய அரசு நியமிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்தவர் கிருஷ்ணம் ராஜு. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து ஆந்திராவைச் சேர்ந்தவர்களையே குறி வைத்து தமிழக ஆளுநராக்குவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
முன்னதாக கர்நாடக பாஜக தலைவரான சங்கரமூர்த்தி ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த நடிகரை ஆளுநராக்க பாஜக தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.