சசிகலாவுக்கு ஆப்பு ரெடி?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலா தற்போது ஏற்றுள்ளார்.

ஆனால் இதற்கு கட்சியில் உள்ள சிலர் இன்றளவிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று அதிமுக-வின் முக்கிய அமைச்சர்கள் பலர் சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து சசிகலா இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுக-வைச் சேர்ந்த பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவரது வீட்டிற்கு நாள்தோறும் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் இது குறித்து தீபா கூறுகையில், சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும்.

அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன். ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள்.

இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது. இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு.

அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்துக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.