பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த சல்மான் தசீர் அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் மத அவமதிப்பு சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு ஆதரவான கருத்துக்களை சல்மான் தசீர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார்.
அவரது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில் தெக்ரிக் லப்பாயக் யா ரசூலா என்ற அமைப்பு லாகூரில் குல்பர்க் உள்ளிட்ட 2 இடங்களில் ஆதரவு பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
லாகூரில் மால் ரோட்டில் நடந்த பேரணியில் ஏராளமான மத குருக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கவர்னர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற 105 மத குருக்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே குல்பெர்க்கில் நடைபெற இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.