‘பைரவா’ படத்தில் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு ‘ட்ரீட்’

விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பைரவா’. ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன்  இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக, ‘பைரவா’ படத்தின் 5 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. பாடல்கள் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ”வரலாம் வா வரலாம் வா பைரவா” பாடல் ரசிகர்கள் விரும்பிக்  கேட்கும் பாடலாக அமைந்தது.

இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் எழுதிய மற்றொரு மெலடி பாடலும் ஆல்பத்துடன் இணைக்கப்படுவதாக அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 4 பாடல்களுக்கு வைரமுத்துவும், ஒரு பாடலுக்கு அருண்ராஜா காமராஜும் பாடல்  வரிகளை எழுதியுள்ளனர்.

தணிக்கைக்குழு சோதனையில் ‘யு’ சான்றிதழை பெற்ற இப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.