தாஜூடினை பின் தொடர்ந்த நபர் சிக்கினார்!..

வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பிரபல றகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு இன்றைய தினம் (06) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த கொலை இடம்பெற்ற போது பதிவாகிய சீசீடீவி காணொளியை வைத்தே அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் இந்த மாதம் மாதம் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல றகர் வீரர் வசிம் தாஜூடின் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.