மிகவும் குறைந்த விலையிலான கார்களை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படும் Waters auto mobile தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற மோட்டார் வாகனங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
வருடத்திற்கு கிட்டத்தட்ட 500 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ள நிலையில், 3 வருட காலப்பகுதியினுள் அவர்கள் தங்கள் வாகனங்களை உள்ளூர் ரீதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
பயணிகள் மோட்டார் வாகனம், பந்தைய வாகனம், SUV வாகனம், பல பயன்பாட்டு வாகனங்கள் (MUV) அல்லது வர்த்தக வாகனங்கள் இங்கு இணைக்கப்படவுள்ளது.
டீசல் வாகனங்கள் இணைப்பதற்கு ஆரம்பத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் பெட்ரோல், மின்சாரம், ஹைபிரிட் வாகனங்களை இணைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.