தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று அல்லது நாளைய தினத்திற்குள் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் கடுமையாக தெரிவித்துக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய பொலிஸ் மோசடி விசாரணை பிரிவிற்கு அழைப்பு விடுக்காமல் அதன் அதிகாரிகள் விமலின் வீட்டில் அல்லது அவர் உள்ள இடத்திற்கு சென்று கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்ட முறைக்கமைய இந்த கைதும் இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் திட்டமிட்ட அரசியல் நுட்பமாக கைது செய்யப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.