அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் சசிகலா அக்கட்சி நிர்வாகிகளுடன் சரியாக பேசத்தெரியாமல் திணறி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்தார் என்ற அடிப்படை தகுதியை வைத்து அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள சசிகலா, முதல் முறையாக அதிமுக கூட்டத்தில் பேசும்போது, கண்ணீர் விட்டு பேசினார்.
அதுவும், தாளில் எழுதி வைத்துள்ளதை அப்படி பார்த்து பேசியதோடு மட்டுமல்லாமல் இடையிடையே ஜெயலலிதாவின் பெயர் அடிபடும்போது கண்ணீர்விட்டதால் அவரது பேச்சுமுறை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் இவர், தான் எழுதிவைத்துள்ளதை பார்த்து பேசுகிறாரே தவிர, எந்தவித இடையூறும் இன்றி சரளமாக பேசதெரியாமல் திணறி வருகிறார்.
மேலும் இடையிடையே எழுதிவைத்துள்ளதையும் சரியாக படிக்க தெரியாமல் திணறிவருவது மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை எந்த மேடையிலும் பேசிப்பழக்கம் இல்லாத இவர், இனிநடக்கவிருக்கும் அரசியல் பொதுக்கூட்டங்களில் எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்பது சவாலான ஒன்று என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.