அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வழியாக முதல் கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலா பிரதமருக்கு விடுக்கும் முதல் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல்தலை தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாயிகள், ஏதிர்கட்சி தலைவர் உட்பட பலர் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.