தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஜெயலலிதா சென்னை ஆர்.கே நகர் தொகுதியிலிருந்து தான் கடைசியாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தொகுதி மக்களும், அதிமுக தொண்டர்களும் நேற்று அவர் இறந்த 30வது நாளை அனுசரிக்கும் வகையில் மவுன ஊர்வலம் சென்றார்கள்.
அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட குப்பு என்ற மூதாட்டி கூறுகையில், நாங்கள் இந்த ஊர்வலத்தை நடத்துவது அம்மா மீது கொண்ட பாசத்தால் தான்.
சசிகலா இந்த தொகுதியில் நின்றால் யாரும் அவருக்கு ஓட்டு போட மாட்டோம். முடிந்தால் அவரை தேர்தலில் ஜெயிக்கசொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளனர்.
மேலும் பத்மா என்னும் பெண் கூறுகையில், 75 நாட்கள் அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது யாராவது அவர் முகத்தை எங்களுக்கு காட்டினார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கிருந்த பலபெண்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையில் நேற்று தீபா, விரைவில் நான் அரசியலுக்கு வருவேன். அதை யாரும் தடுக்க முடியாது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.