ஜெயலலிதா வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வருக்கு நோபல் பரிசு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவு அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.